Friday, May 13, 2016

அன்னையர் தினம் 2015

இன்று அன்னையர் தினம்
நான் தாய் நாட்டிலும் இல்லை
என் தாய் வீட்டிலும் இல்லை
உடன் பிறந்த சொந்தங்கள்
உலகின் ஒவ்வோர் மூலையில் சிதறி கிடக்க 
உடன் பிறவா சொந்தங்கள்
நண்பர்கள் என்ற பெயரில் உடன் இருக்க
வேகமாய் சுழலும் இந்த வாழ்க்கையிலும்
ஒரு சிறு துன்பம் என்றாலும்
தொலைபேசியிலும், மெசேஜ் லேயும்
" Is Everything ok " ? , " enna aachi " ? , "What happened " ?
என்று பதறி கேட்கும் அனைத்து நல்ல உள்ளங்களிலும்
அன்னையை பார்க்கிறேன் !
என்னை பெற்ற தாய் ஒருவர்
வளர்த்த தாய் ஐவர்
என் தந்தையையும் சேர்த்து ...
அன்னை என்ற வார்த்தைக்கு
அன்பு என்ற அர்த்தம் என்றால் ...
என் தாயும், சகோதரிகளும்,
உன் கண்ணில் வரும் கண்ணீரை துடைப்பவன் இல்லை நான் ....
அந்த கண்ணீருக்கு காரணமாய் நான் என்றும் இருக்க மாட்டேன் ...என்று வாழ்வில் உணர்த்தி வரும்
என் கணவரும் ,
நான் திட்டும் வார்த்தைகளுக்கு என்னையே கட்டி அழும்
என் செல்வங்களும் ,
நிதமும் என் சிரிப்பை தவிர வேறு எதையும் எதிர் பார
என் உயிர் நண்பர்களும் ..
எனக்கு அன்னையரே !!!
என்னை சுற்றி இருக்கும் அனைத்து தாய் உள்ளங்களுக்கும்
என் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !!!!💐💐💐💐


அன்னையர் தின வாழ்த்துக்கள் 2014

பல நூறு வார்த்தைகள் .....பல நூறு உறவுகள் ....பல நூறு உணர்ச்சிகள் ....
அன்றாடம் நம் வாழ்வில் வந்து போனாலும் ...
நாம் பிறந்த நொடியில் இருந்து
இன்று வரை நம் உணர்வோடு, உறவோடு , வார்த்தையாய்..வாக்கியமாய் ...
நம் ரத்தத்தில் கலந்து விட்ட " அம்மா " என்ற உறவுக்கு 
பெயராக மட்டும் இல்லாமல் .....அர்த்தமாய் வாழும்
இந்த பூமியில் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ...
இந்த நாள் உங்கள் இனிய நாளாகும் !
இந்த நாளின் பெருமையை உணர்த்திய என் தாய்க்கும் .....
இந்த நாளின் வாழ்த்தை எனக்கும் உரியதாக்கிய என் செல்வங்களுக்கும் ....
என் நன்றி !


Thursday, April 14, 2016

விமான நிலையம் !

விமான நிலையம் !
பெரியவர் முதல் சிறியவர் வரை ..
பார்க்க விரும்பும் ஓர் இடம் !
விமானம் !
பெரியவர் முதல் சிறியவர் வரை
பயணம் செல்ல விரும்பும் ஓர் வாகனம் !
எது வரை ?


உல்லாச பயணம் தவிர ...உன் வேலை நிமித்தம்
நீ அயல்நாடு செல்லும் வரை …
உன் கால்கள் என்று அயல் மண்ணை மிதிக்க
உன் மண்ணை விட்டு பிரிகின்றதோ ????
அந்த நாள் உன் வாழ்வில் வரும் வரை ….


ஐயோ !!! அன்று தெரியும் அந்த விமான நிலையம் ஒரு
முகம் தெரியா எதிரி என்று !
உன்னை …. உன் உரிமைகளை உனக்கே தெரியாமல்
உள் வாங்கி …….சிரித்து வரவேற்று ….உன்
உயிரை வேரோடு அறுத்து எரியும் வலி !


வளர்த்த உயிர்களை …..
வளர்ந்த மண்ணை …
பற்றி பழகிய தோழர்களை ….
எட்டி முறைத்த எதிரிகளை …
விட்டு செல்லும் அந்த தருணம் !


வயிற்றுக்கும் , தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளதடீ !!
என்ற சினிமா வரிகளின் அர்த்தம் புரிந்த தருணம்  !
ஆயிரம் வார்த்தைகள் நம் மொழிகளில் தெரிந்தும் ….
கண்ணீர் மட்டுமே பேசும் தருணம் !


பிரிவென்றால் ….
காதலன் , காதலிக்கு மட்டும் அல்ல …
அனைத்து உறவுகளின் பிரிவிக்கும் ….
வலி உண்டு என புரிய வரும் ..
நம் உறவுகளுக்கு கை அசைக்கும் தருணம் !


விமான நிலையம் !
பெரியவர் முதல் சிறியவர் வரை ..
பார்க்க விரும்பும் ஓர் இடம் !
விமானம் !
பெரியவர் முதல் சிறியவர் வரை

பயணம் செல்ல விரும்பும் ஓர் வாகனம் !

Thursday, February 11, 2016

என் கணவருக்காக !

என்னுள் வந்த நாள் முதல் 
இன்று வாழும்  நாள் வரை 
தனக்கென வாழ்ந்ததில்லை நீ 
எனக்கென வாழ்ந்தாயா  ? என கேட்கவில்லை 
நான் அறிவேன் நீ எனக்காக மட்டுமே சுவாசித்தாய் என 

என் சிரிப்பு உன் கனவு 
என் சோகம் உன் தவிப்பு 
உன் தியாகம் என் வாழ்க்கை 
உன் உழைப்பு என் செழிப்பு 

நீ உன் அன்பை உணர்த்தியது 
வார்த்தையாய்  அல்ல .... வாழ்க்கையாய் ! 

உன் வாழ்வின் மிக அருமையான சந்தர்ப்பம் இது 
உன் தாயின் மகனாய் , 
தோழனுக்கு தோழனாய் 
நீ வாழ்ந்த நிமிடங்களை திரும்பி பார்க்கும் ஒரு தருணம் !

எங்கிருந்தாலும் வாழ்க என பாடும் சோக கீதம் இல்லை இது 
உன் வாழ்வை சிறிது ரசித்து விட்டு...
 என்னிடமே  வா என சொல்லும் சுயநலம்  இது !

காத்திருப்போம்  உனக்காக 
நீ நலமாய் வரும் நேரம் பார்த்து 

Sunday, September 7, 2014

யார் நீ ?

அர்த்தமற்ற சிரிப்புகளும்
அர்த்தமாகும் .....
தூக்கமற்ற இரவுகளும்
கனா காணும் ...... 
இரவும் பகலாகும் ...
பகலும் அழகாகும் 
வலியோ ? சுகமோ ? 
எது வென்று அறியேன் 
பக்கத்தில் நீ இருந்தால் !!!







Tuesday, July 29, 2014

கல்யாண பரிசு

என் திருமணம் முடிந்து 
பத்து ஆண்டு காலம் ஆகிவிட்டதா ??????
நம்ப முடியவில்லை ...வில்லை ...வில்லை !!!!

10   வருட காலங்கள் ....

மணம் செய்ய மனம் கூடி பேசிய 
இருவர் தந்தையும் திருவடி சேர்ந்தனர் !!
குலம் வாழ வாழ்த்தி நின்ற 
இருவர் அன்னையரும் இந்தியாவில் வாழ்கின்றனர் ! 

எங்களின் திருமணத்தை 
தங்களின் திருவிழாவாய்...மகிழ்ந்த 
உடன் பிறந்தவர்களும் 
தொலை தூரத்தில் நின்று 
தொலைபேசியில் வாழ்த்து கூற .....

அன்னை தந்தை தான் உலகம்  என சுற்றிய காலங்கள் சில ...
அண்ணனும் ,அக்காவும் தான் உறவு என எண்ணிய எண்ணங்கள் பல ....
ரத்த பந்தத்தின் ...
பாசம் சொல்லில் அடங்காதவை !!! 
ஏட்டில் எழுதாதவை !!
மனதில் என்றும் மறையாதவை !! 

இத்தனை இத்தனை உறவுகள் 
எத்தனை எத்தனை நினைவுகள் ..

இன்று ...
காலங்கள் மாறியதை மனம் உணர்கிறது !! 

 .. வாழும் உறவுகள் ஒருபுறம் இருக்க ..

என்னகென்ன ..நீயும் 
உனக்கென்ன நானும் 
நமக்கென்ன இரு கண்கள் !!! 

நம் வாழ்வின் ஒவ்வொரு விடியலும் 
வானில் உதிக்கும் சூரியனால் மட்டும் இல்லை ...
நம் இரு கண்களில் மின்னும் ஒளியினாலும் !!!

கடவுள் குடுத்த கண்களால் 
உலகை காண .....
நாம் படைத்த இரு கண்களால் 
வாழ்வை ரசிக்கிறோம் !!!!

இன்று போல் என்றும் 
இந்த அன்பு மாறாமல் 
இருக்க உனக்கு நானும் 
எனக்கு நீயும் 
வாழ்த்தை வார்த்தையால் சொல்லாமல் 
வாழ்க்கையாய் வாழ்வோம் என சொல்லி 
என்னால் உனக்கு குடுக்க முடிந்த பரிசு 
என் மனதோடு நிற்கும் என் தமிழ் வார்த்தைகளே !!!!! 

Monday, July 28, 2014

படித்ததில் பிடித்தது ...

 எப்போதோ சந்தித்தது
சாவகாச நினைவுகளில்!!!
கரைந்த உணர்வுகள்
உன்னை தேடு கின்றன...
உனக்கு பிடித்த பாடல்கள்
என் வீட்டில் கேட்கிறது...
உனக்கு பிடித்த மலர், உனக்கு பிடித்த கவிதை
என்று நிறைய இருக்கிறது
உன்னை நினைக்க செய்வதற்கு..
ஏதெதோ கவிதை எழுதுகிறேன்
உன்னை பற்றி எழுத முடிவதில்லை
எழுதாத கவிதை ஒன்று...
சொல்ல மறந்த கவிதை ஒன்று...
என் இதயத்துக்குள்ளே
இன்னமும் இருக்கிறது...........