தீபங்கள் ஏற்றும் தீப திருநாளில் ...
புத்தாடை அணிந்து
மத்தாப்பு கொளுத்தி
தெருவினில் ஓடி
வெடி வெடித்து ...
அக்கம் பக்கம் சென்று
பலகாரம் பகிர்ந்து
மகிழ்ந்த காலங்கள்
நெஞ்சில் நிழலாய்
நிற்க !!!!
இன்று .....
தொலைவில் இருக்கும் உறவுகளுக்கு .....
தொலைபேசியில் அழைத்து
வாழ்த்து சொல்லும் போது
யாரோ தெருவில் வெடிக்கும்
வெடி சத்தமே நம் தீபாவளி ஆனது !!!
இருந்தும் மனம் என்னவோ
தீபாவளி என்ற பெயருக்கே
இத்தனை மகிழ்வை தருகிறது !!!!
அந்த மகிழ்வோடு ....
மன நிறைவோடு ....
என் அனைத்து இனிய நண்பர்களுக்கும்
தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!!!!!!!!
No comments:
Post a Comment