Saturday, February 25, 2012

ஒரு தாயின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

இந்த நாள் ???

9 வருடங்களுக்கு முன் ....

November 10

வேதனையில் சிரிக்க கற்று தந்த நாள் ...
என் உயிரின் மதிப்பை நான் உணர்ந்த நாள் !!
முதல் முறையாக ..
என் வலியை நானே ரசித்த நாள் .....
எனக்கு வலி உயிர் போகிறது !! ..... உனக்கேன் இத்தனை கொண்டாட்டம் ???
என மற்றவரின் சிரிப்பில் மனம் கொந்தளிக்காத நாள் .......

நான் படுக்கையில் கிடக்க ..
நாலாபுறமும் ஆஸ்பத்திரி வாடை வீச ...
ஊசி என் உடம்பை துளைத்து மருந்தை ஏற்றி கொண்டிருக்க ....
எனக்கு நடந்த அறுவை சிகிச்சையின் வலியில்....
அம்மா வலிக்குது !!! என கத்த வேண்டிய நான் ...
என்னை அம்மா என்று அழைக்கும் குரல் தேடி மனம் சென்ற நாள் .....

பெற்றவள் உடனிருக்க ....
உற்றவன் துணையிருக்க .....
கண்கள் மட்டும் ....யாரையோ தேடி நிற்க ....

அதோ அங்கே.....
சின்னதொரு தூளியில் !
சிங்கார சிட்டென ..
எனக்கென்று மலர்ந்த மொட்டென ....
என் இனிய மகள் !!

கண்கள் கலங்கின ....பட்ட வலியினால் அல்ல ...
உலகின் உன்னத சொல்லான "அம்மா "
என்ற சொல்லுக்கு என்னை உரியவள் ஆக்கின
என் மகளுக்கு நான் சொன்ன நன்றியால் !!!!

ஆம் !! இந்த நாள் !!

நான் தாய் என்ற சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்த நாள் !!!
என் செல்ல மகளின் பிறந்த நாள் !

நீ இன்று போல் என்றும் நலமாக வாழ வேண்டும் என்ற
என் எண்ணங்களோடு .......
என் நட்பும் , சுற்றமும் சூழ உன்னை வாழ்த்த அனைவரையும் கேட்டு கொள்கிறேன் !!!!

No comments:

Post a Comment