அதிகாலை நேரம் ...உறக்கம் இல்லை கண்ணில் ..
அருகில் இருந்த மகனையும் மகளையும்
பார்த்த சில நொடிகள் எண்ணங்கள் எங்கோ சென்றது !!
கள்ளம் கபடமின்றி உறங்கும் சின்ன சிட்டுக்கள் ..
சிறகு முளைக்க வில்லை இன்னும்
ஆனாலும் வானில் பறக்க என்னும் எண்ணங்கள் தான் எத்தனை ?
பிஞ்சு உள்ளங்களின் கனவுகள் ....
வானில் மிதக்கும் நட்சத்திர கூட்டம் போல் எண்ணிக்கை இல்லாதது ...
பல சமயம்..
என் கனவுகளையும்..
சோகங்களையும்
பாசங்களையும்
கோபங்களையும் எனக்காக தாங்கும் என் இரு தூண்கள் !!
கோபத்தில் நான் திட்டிய வார்த்தைகளுக்கு
என்னையே கட்டி பிடித்து கண்ணீர் சிந்தும்
அழகிய சிற்பங்கள் !!
"I Love you Mummy" என தினமும் ஸ்ரீ ராம ஜெயம் போல் சொல்லும்
என் இனிய பக்தர்கள் !!!
இருவரின் நெற்றியில் முத்தமிட்டு எழ முயன்ற
என் கைபிடித்து அருகில் இழுத்து
"I love you Mummy" என்ற மகளின் குரல் கேட்டு ஏனோ கண்ணீர் வந்தது !!!
வீட்டின் கீழே வந்து ஜன்னலின் வழியே ....
வானம் புதியதாய் தெரிந்தது ...
பூமி அழகாய் விரிந்தது...
மனதில் புது உற்சாகம் பிறந்தது..
இப்படியே கனவில் லயித்த என்னை
உலுக்கியது மாடியில் நான் அணைக்க மறந்த அலார சத்தம் ....
மனதில் அலறிய படி....
நான் படி ஏறி சென்ற நொடி !!!
தூக்கம் கலைந்த கோபத்தில் என் செல்ல மகள் !
"I hate you" Mummy என்றாள்...
சிரிப்பதா? கோபப்படுவதா?
என புரியாமல் ....
அவளை பார்த்து sorry செல்லம் என சொல்லிவிட்டு
அவளின் உதட்டோரம் வந்த ஒரு சின்ன புன்னகை பார்த்து
சிரித்து கொண்டே என் இனிய நாளை துவங்கினேன் !!!!!
No comments:
Post a Comment